கிள்ளான் துறைமுகம் வாயிலாக பன்றிகள் சிலாங்கூருக்கு கொண்டு வரப்பட்ட விவகாரம் : மாநில அரசு விசாரணை

20 அக்டோபர் 2026, 9:49 AM
கிள்ளான் துறைமுகம் வாயிலாக பன்றிகள் சிலாங்கூருக்கு கொண்டு வரப்பட்ட விவகாரம் : மாநில அரசு விசாரணை

ஷா ஆலாம், அக் 26: சரவாக்கிலிருந்து உயிருள்ள பன்றிகள் கிள்ளான் துறைமுகத்தின் வாயிலாக சிலாங்கூருக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து மாநில அரசு விசாரிக்குமென மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்த ஆய்வுக்குப் பின்னர் , அந்த கால்நடைகள் ஏன் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படுமென அவர் கூறினார்.

சிலாங்கூர் நீர் நிறுவனம்,யுனிசெல் (UNISEL) பல்கலைகழகம் மற்றும் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்தின் தொடக்க விழாற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்து கருத்துரைத்தார்.

"நான் இது குறித்து விசாரித்து வருகிறேன். ஏனெனில், கொண்டு வரப்பட்ட கால்நடைகள் முழுவதும் சிலாங்கூருக்கானது அல்ல, சில பிற மாநிலங்களுக்கானது. பிற மாநிலங்கள் இறக்குமதி செய்ய விரும்பினால், அதற்கான நுழைவாயிலாக சிலாங்கூர் உள்ளது. நான் இதை மீண்டும் சரிபார்த்து, அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

முன்னதாக, கிள்ளான் துறைமுக ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என நம்பப்படும் ஒரு குழுவினர், இந்தத் துறைமுகம் வழியாக சரவாக்கிலிருந்து உயிருள்ள பன்றிகள் கொண்டு வரப்பட்டது தொடர்பில் தங்களது கவலையை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கமும் (PPIM) இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு அபாயங்களையும், அங்கு பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களின் உணர்வுகளையும் சுட்டிக் காட்டியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.