இளைய தலைமுறையின் ஆற்றலை வளர்த்தெடுக்க கல்விக்கு சிலாங்கூர் RM13 கோடி நிதி

17 அக்டோபர் 2026, 7:39 AM
இளைய தலைமுறையின் ஆற்றலை வளர்த்தெடுக்க கல்விக்கு சிலாங்கூர் RM13 கோடி நிதி
இளைய தலைமுறையின் ஆற்றலை வளர்த்தெடுக்க கல்விக்கு சிலாங்கூர் RM13 கோடி நிதி
இளைய தலைமுறையின் ஆற்றலை வளர்த்தெடுக்க கல்விக்கு சிலாங்கூர் RM13 கோடி நிதி

கோலாலம்பூர், அக் 17 - கல்விக்கான ஒதுக்கீட்டை 5 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டாக அதிகரித்து, 2026- ஆம் ஆண்டில் அதன் மொத்தத் தொகையை 13 கோடி ரிங்கிட்டுக்கும் மேலாக உயர்த்தியிருப்பது, கல்வி வளர்ச்சி மற்றும் இளைய தலைமுறையினரின் திறனை மேம்படுத்துவதில் சிலாங்கூர் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டினைப் பிரதிபலிக்கிறது.

எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் இளைஞர்கள் வெறும் அறிவை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல், தங்களின் தன்னம்பிக்கை, தனித்துவ அடையாளம் மற்றும் நற்பண்புகளையும் கொண்டிருப்பதை உறுதி செய்ய இந்த முதலீடு முக்கியமானது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ‘செமராக் காசே 2026' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்

இன்னும் 30 ஆண்டுகளில், அதாவது 2057-இல் மலேசியா தனது 100-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடவிருக்கிறது. இவ்வேளையில், இளைய தலைமுறையினர் பயனுள்ள அறிவு, துல்லியமான தகவல் மற்றும் நல்ல ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

"நாம் 100 வயதை எட்டவிருக்கும் வேளையில், மலேசிய இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாக மாற வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை வெறும் வெற்று நம்பிக்கையாக இருக்கக் கூடாது. அது பயனுள்ள அறிவு, துல்லியமான தகவல் மற்றும் சரியான நற்பண்புகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அதுவே நாம் எதிர்பார்க்கும் தன்னம்பிக்கை," என்று அவர் கூறினார்.

2026 செமராக் காசே நிகழ்ச்சியின் போது மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற, 740 எஸ்.பி.எம் (SPM) தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் 'யாயாசான் சிலாங்கூர் படிவம் 5 மாணவர்களுக்கான செமராக் காசே 2026' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி என்பது வெறும் கல்விசார் சாதனைகளை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது, மாறாக மாணவர்களின் குணாதிசயம், ஆளுமை மற்றும் நற்பண்புகளை உருவாக்கி, அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அமிருடின் கூறினார்.

கல்வித் துறையில் மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த தீவிர முதலீடு, கல்வித் துறையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும், இளைய தலைமுறையினர் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் கொண்டுள்ள உறுதியைக் காட்டுகிறது என்றார்.

நிதியுதவி மற்றும் உபகாரச்சம்பளம் வழங்குவதுடன் மட்டுமின்றி, கல்வி சாதனைகளை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் திறன்களை முழுமையாக வளர்ப்பதற்கும் அதிக தாக்கம் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் முன்னணி கல்வி அறக்கட்டளையாக யாயாசான் சிலாங்கூர் (Yayasan Selangor) தனது பங்கைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போது மாநில வளர்ச்சியில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் யாயாசான் சிலாங்கூர் முன்னாள் மாணவர்களின் (alumni) வெற்றி, திறமையான தலைமுறையை உருவாக்குவதில் இந்த நிறுவனத்தின் செயல்திறனை நிரூபிக்கிறது என்றும் அவர் கூறினார்.

உதாரணமாக, இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் டத்தோ ஹசான் அஷாரி யாயாசான் சிலாங்கூரின் முன்னாள் மாணவர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.