ஷா ஆலாம், 21 செப்டம்பர் – யாயசான் சிலாங்கூர் 2026 கல்வி ஆண்டுக்கான கல்வி அமைச்சின் சிறப்பு கல்வித் திட்டம் வழியாக, மாநிலம் முழுவதும் உள்ள 460 ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
யாயசான் சிலாங்கூர் நிறுவனத் தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில், விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதில், வகுப்பறை மதிப்பீட்டில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் TP3 மதிப்பெண் பெறுதல் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் மாணவரும், அவர்களின் பெற்றோரும் சிலாங்கூரில் பிறந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலத்தில் வசித்து வருபவர்களாகவோ இருக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர் மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் குடும்ப மாத வருமானம் RM2,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் 22 செப்டம்பர் முதல் 8 அக்டோபர் 2025 வரை யாயசான் சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிந்துக்கொள்ளளாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, முழுமையான வசதிகள், கல்வி உதவித்தொகை, கூடுதல் பயிற்சி வகுப்புகள், கல்வி சிறப்புத் திட்டங்கள், தனிமுனைவு வளர்ச்சி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் தொடர்ந்து கண்காணிப்பு வழங்கப்படும்.