20 கிலோ கஞ்சா பூக்களை கடத்த முயன்ற மலேசியர் தாய்லாந்து போலீசாரால் கைது

17 அக்டோபர் 2026, 3:55 AM
20 கிலோ கஞ்சா பூக்களை கடத்த முயன்ற மலேசியர் தாய்லாந்து போலீசாரால் கைது
20 கிலோ கஞ்சா பூக்களை கடத்த முயன்ற மலேசியர் தாய்லாந்து போலீசாரால் கைது

நாராதிவாட், அக் 17 - நேற்று சொங்க்லாவின் சடாவ் மாவட்டத்தில் உள்ள பாடாங் பெசார் சுங்கச் சாவடி வழியாக 36,599 ரிங்கிட் மதிப்புள்ள 20 கிலோகிராம் கஞ்சா பூக்களை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் மலேசியர் ஒருவரை தாய்லாந்து போலீஸார் கைது செய்தனர்.

மலேசியப் பதிவு எண் கொண்ட காரை ஓட்டி நாட்டிற்குள் நுழைய முயன்ற 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், நேற்று காலை 11.45 மணியளவில் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அந்த வாகனத்தை மேலும் சோதனை செய்தபோது, பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பூக்கள் கண்டெடுக்கப்பட்டதாக வட்டார 9 போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

"அந்த கஞ்சா பூக்கள் பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிடப்பட்டு, பயணிகள் இருக்கை மற்றும் காரின் பூட் பகுதியிலிருந்து எடுக்கும் வகையில் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன" என்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டது.

தாய்லாந்தில் இருந்து இந்த கஞ்சா பூக்களைக் கடத்த முயன்றபோது, சுங்கச் சாவடியைக் கடக்கும் வேளையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கஞ்சா பூக்கள் மலேசிய சந்தைக்குள் நுழைந்தால் அதன் மதிப்பு 7 லட்சம் ரிங்கிட் முதல் 19 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் வரை உயரக்கூடும் என்று அந்த ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வேளையில், கைதான நபர் தாய்லாந்து சுங்கச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவிருக்கிறார்.

இக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பில் நான்கு மடங்கு அபராதம், அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.