பூச்சோங் பிரிமா LRT - பள்ளி இடையேயான கூரையிடப்பட்ட நடைபாதை : இன்னும் 2 மாதங்களில் தொடங்கும்

13 அக்டோபர் 2026, 2:04 PM
பூச்சோங் பிரிமா LRT - பள்ளி இடையேயான கூரையிடப்பட்ட நடைபாதை :  இன்னும் 2  மாதங்களில் தொடங்கும்
பூச்சோங் பிரிமா LRT - பள்ளி இடையேயான கூரையிடப்பட்ட நடைபாதை :  இன்னும் 2  மாதங்களில் தொடங்கும்
பூச்சோங் பிரிமா LRT - பள்ளி இடையேயான கூரையிடப்பட்ட நடைபாதை :  இன்னும் 2  மாதங்களில் தொடங்கும்

சுபாங் ஜெயா,அக் 13: பூச்சோங் பிரிமா எல்.ஆர்.டி நிலையத்தையும் புச்சோங் பெர்மாய் தேசிய இடைநிலைப் பள்ளியையும் இணைக்கும் கூரையிடப்பட்ட நடைபாதையை அமைக்கும் திட்டம் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை சுபாங் ஜெயா மாநகராட்சியும் (MBSJ) சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளரும் இணைந்து திட்டமிட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் : படம் -மீடியா சிலாங்கூர்

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் பாதுகாப்பான, வசதியான பாதையை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றாரவர்.

இன்று புச்சோங் பிரிமா மற்றும் புச்சோங் பெர்மாய் பகுதிகளைச் சுற்றியுள்ள நடைபாதைகளை ஆய்வு செய்தப் பின்னர் அவர் மீடியா சிலாங்கூரிடம் பேசினார்.

" ஆய்வில் இப்பகுதியில் நடைபாதைகள் நல்ல நிலையில் இருந்தாலும், மேம்படுத்தப்பட வேண்டிய இரண்டு அல்லது மூன்று இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன." என்றார்.

சிலாங்கூர் மாநில போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், சுபாங் ஜெயா மாநகராட்சி உறுப்பினருடன் நடைபாதைகளின் நிலைமையைக் கண்டறிகிறார். படம் -மீடியா சிலாங்கூர்

மேலும் சம்பந்தப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நடைபாதையை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நிறைவடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, பூச்சோங் பெர்மாய் இடைநிலைப் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருந்தது.

குறிப்பாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த கவலை வெளிப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இப்பள்ளியின் முன்புறமுள்ள பாதசாரிகள் கடக்கும் பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்ட ' விவேக சென்சார் விழிப்புணர்வு' (SENSA) எச்சரிக்கை அமைப்பை , ஒரு முன்னோடித் திட்டமாக சுபாங் ஜெயா மாநகராட்சி நிறுவியது குறிப்பிடத்தக்கது.

அந்த அமைப்பு பாதசாரிகள் இருப்பதைத் தானாகவே கண்டறிந்து, அதன் பின்னர் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் நிகழ்நேரத்தில் (real-time) ஒலி மற்றும் காட்சி வழியிலான எச்சரிக்கைகளைச் செயல்படுத்தும் திறன் கொண்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.