கிளென்மேரி சாலை விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு, ஐவர் காயம்

12 அக்டோபர் 2026, 2:38 AM
கிளென்மேரி சாலை விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு, ஐவர் காயம்

ஷா ஆலாம், அக். 12 – இங்குள்ள கிளென்மேரி தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள ஜாலான் பென்யாஜாக் ஹிகோம் சாலையில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்தனர்.

இன்று நள்ளிரவு 12.27 மணிக்கு விபத்து தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வரில், 20 வயதுடைய இரு ஆடவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே காரில் பயணித்த 19 வயதுடைய மற்ற இருவர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

மற்றொரு பல்நோக்கு வாகனமான எம்.பி.வி.யில் பயணித்த மூவரும் காயமடைந்தனர். அவர்களில் 29 வயதுடைய பெண் ஒருவரும், 27 மற்றும் 28 வயதுடைய இரு ஆடவர்களும் அடங்குவர். மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

விபத்தில் பாதிக்கப்பட்ட ஏழு பேரும் மலேசியர்கள் எனத் தெரிவித்த அஷ்ருல் ரிஸால், மேல் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சும் காவல்துறையும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.