பிரேசரில் புலி நடமாட்டம்: நான்கு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறை

11 அக்டோபர் 2026, 3:55 AM
பிரேசரில் புலி நடமாட்டம்: நான்கு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறை

குவாந்தான், அக். 11 — பகாங், ரவூப் மாவட்டத்தில், பிரேசர் மலைப்பாதையில் இருந்து சிலாங்கூர், கோலா குபு பாரு நோக்கிச் செல்லும் சாலையோரத்தில் புலி ஒன்று நடமாடியதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து, வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் பாதுகாப்புத் துறை (பெர்ஹிலித்தான்) நான்கு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளதாகப் பகாங் மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் யூசோப் ஷரிப் தெரிவித்தார்.

தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற பெர்ஹிலித்தான் அதிகாரிகள் நால்வர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதுடன் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக நான்கு கேமராக்களையும் பொருத்தியதாக அவர் கூறினார்.

இதுகுறித்து பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், புலியின் நடமாட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதற்கிடையில், சாலையோரத்தில் புலி தென்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

புலியின் நடமாட்டம் குறித்த தகவல்களை உறுதிப்படுத்தவும், அப்பகுதியில் அதன் இருப்பிடத்தைக் கண்டறியவும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.