ஷா ஆலாம், அக்.9 – புகைமூட்டம் காரணமாக சிலாங்கூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.
அரசாங்கத்தின் உத்தரவைப் பின்பற்றுவதுடன், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
புகைமூட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பள்ளிகள் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையான பி.டி.பி.ஆர். (PdPR) முறையை அமல்படுத்த வேண்டும்.
இந்தப் பள்ளி மூடல் நடவடிக்கையானது, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வெளியிட்ட உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் புகைமூட்டம் நிலவரம் குறித்து கவலை தெரிவித்த மாமன்னர், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தார்.







