புகைமூட்டம்: பாதிக்கப்பட்ட பள்ளிகளை மூட பேரரசர் அறிவுறுத்து

8 அக்டோபர் 2026, 8:23 AM
புகைமூட்டம்: பாதிக்கப்பட்ட பள்ளிகளை மூட பேரரசர் அறிவுறுத்து

ஷா ஆலாம், அக் 8 - காற்று மாசடைவு குறியீடு (IPU) 150 முதல் 180 என்ற அளவில் தொடர்ந்து நீடிப்பதை அடுத்து, புகைமூட்டம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுமாறு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள புகைமூட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்று பேரரசர் வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சு இவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ள நோயாளிகள் உட்பட, பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சும் அமைப்புகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புகைமூட்ட சூழ்நிலை நிலவுவதால், ஆரோக்கியத்தைப் பேண எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்; முகக்கவசங்களை அணியுங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்,” என்று அரச ஊடக அலுவலகத்திற்கு பேரரசர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, ஜோகூர் மாநிலத்தில் புகைமூட்டம் மற்றும் காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவின் பேரில், அங்குள்ள பள்ளிகள் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக ஜோகூர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.