ஷா ஆலம், அக் 8 : சுபாங் ஜெயா, USJ 25 பகுதியில் முறையான உரிமமின்றிச் செயல்பட்டு வந்த பொழுதுபோக்கு மையம் ஒன்று சுபாங் ஜெயா மாநகராட்சியால் (MBSJ) அதிரடியாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
மாநகராட்சியின் சோதனையின்போது, அந்த மையத்திற்கு வணிக உரிமமோ முறையான பொழுதுபோக்கு உரிமமோ இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி அந்த வளாகம் உடனடியாக மூடப்பட்டது.
"அனைத்து வணிக வளாகங்களும் முறையான உரிமத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய, குறிப்பாக வணிகப் பகுதிகளில் , இத்தகைய சோதனைகளும் அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்," என்று MBSJ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
விதிமுறைகளை மீறி செயல்படும் வணிகங்கள் குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் MBSJ அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாகவோ அல்லது சுபாங் ஜெயா கட்டுப்பாட்டு மையத்தை 03-8024 7700 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் .







