செப்பாங்கில் மெகா உணவு விழா :10,000 வருகையாளர்களை ஈர்க்க இலக்கு

4 அக்டோபர் 2026, 8:54 AM
செப்பாங்கில் மெகா உணவு விழா :10,000 வருகையாளர்களை ஈர்க்க இலக்கு
செப்பாங்கில் மெகா உணவு விழா :10,000 வருகையாளர்களை ஈர்க்க இலக்கு
செப்பாங்கில் மெகா உணவு விழா :10,000 வருகையாளர்களை ஈர்க்க இலக்கு

செப்பாங், அக் 4 : 2026 சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய மித்சுயி அவுட்லெட் பார்க் வாகன நிறுத்துமிடத்தில் இந்த மூன்று நாள் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்துக்கு மீண்டும் திரும்பிய ஃபார்முலா 1 பந்தயத்தை ஒட்டி, கார் பந்தய ரசிகர்களைக் கவரும் வகையில் அவ்விடம் தேர்வு செய்யப்பட்டதாக மாநில சுற்றுலா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் தெரிவித்தார்.

முன்னதாக அவர் சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

உணவு விழாவின் முதல் இரு நாட்களிலும், குறிப்பாக இரவு நேரங்களில் வரவேற்பு அமோகமாக இருந்தது.

சிலர் செப்பாங் பந்தயத் தளத்துக்கு தங்களது பயணத்தைத் தொடர்வதற்கு முன் உணவுகளை வாங்கிச் செல்ல இங்கு நின்றதாகவும் இங் சூ லிம் கூறினார்.

மேலும் இன்றிரவு இங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் உணவுகள் மற்றும் மாநில சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இந்த உணவுத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு என்றும் அவர் விளக்கினார்.

அடுத்தாண்டுக்கான ஏற்பாடு குறித்து கருத்து தெரிவித்த இங் சூ லிம், பார்வையாளர்களின் வரவேற்பு, தளவாடங்களின் பொருத்தம் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவ்விழா நடைபெறும் இடம் இன்னும் ஆய்வில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மெகா உணவு விழாவில், பாரம்பரிய, நவீன மற்றும் தற்போதைய உணவுகள் மூலம் சிலாங்கூரின் பல்வேறு சுவைகளை வெளிப்படுத்தும் 60-க்கும் மேற்பட்ட உணவு விற்பனையாளர்கள் ஒன்றுத் திரண்டுள்ளனர்.

இன்றிரவு உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியுடனும் இவ்விழா களை கட்டவுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.