2027 வரவு செலவுத் திட்டத்தில் இளையோருக்கு சிறப்பு ஒதுக்கீடு - கோடி காட்டினார் பிரதமர்

3 அக்டோபர் 2026, 12:37 PM
2027 வரவு செலவுத் திட்டத்தில் இளையோருக்கு சிறப்பு ஒதுக்கீடு - கோடி காட்டினார் பிரதமர்

கோலாலம்பூர், அக் 3 - அக்டோபர் 9 -ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2027 வரவு செலவுத் திட்டத்தில் , இளைஞர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிக்கப்படலாமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டினார்.

குறைந்த வருவாய் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேவை, கல்விச் செலவு உட்பட இளையோருக்கான தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் தாம் கருத்தில் கொள்வதாக , அவர் கூறினார்.

"பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தாங்கள் படிக்க விரும்புவதாகவும், ஆனால் பசியால் இருப்பதாகவும் கூறியுள்ளனர். நான் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கிறேன்" என நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

"சில ஏழை பிள்ளைகள் வேறு வழியின்றி கடன் பட வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை நாங்கள் செவிசாய்க்க வேண்டும். ஆனால் நம் நாடு ஏழை அல்ல. வளங்கள் உள்ளன" என கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இளையோர் பொருளாதார கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றும் போது அவர் அவ்வாறு கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.