சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்டம்: தனியார் துறைக்கும் சிறப்பு விடுமுறை கட்டாயம்

1 அக்டோபர் 2026, 9:37 AM
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்டம்: தனியார் துறைக்கும் சிறப்பு விடுமுறை கட்டாயம்

ஷா ஆலாம், அக். 1: சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 25 ஆண்டு ஆட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விடுமுறை, விருப்பத்திற்குரிய பொது விடுமுறையாகும்.

எனினும், சிலாங்கூரில் உள்ள தனியார் துறை முதலாளிகள் அதனை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையாக வழங்குவது கட்டாயமாகும்.

மலேசிய தீபகற்ப தொழிலாளர் துறை இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமையை வாராந்திர ஓய்வு நாளாக நிர்ணயித்துள்ள முதலாளிகள், அதற்குப் பதிலாக அடுத்த நாளான அக்டோபர் 26ஆம் தேதியை மாற்று பொது விடுமுறையாக வழங்க வேண்டும்.

மேலும், முதலாளிகள் தங்களது ஊழியர்களின் ஒப்புதலுடன், ஊதியத்துடன் கூடிய அந்தப் பொது விடுமுறையை வேறு ஒரு நாளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இந்த நடைமுறை 1955ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் 60D(1) பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அத்துறை குறிப்பிட்டுள்ளது.

1951ஆம் ஆண்டு பொது விடுமுறைச் சட்டத்தின் [சட்டம் 369] துணைப்பிரிவு 9(1)-க்கு இணங்க இந்தச் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சட்டப் பிரிவின் கீழ், மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்தவொரு நாளையும் பொது விடுமுறையாக அறிவிக்க முடியும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.