கோம்பாக்கில் மக்கள் சேவைக்காக 2 நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகள் : மந்திரி பெசார் அறக்கட்டளை நன்கொடை

24 செப்டெம்பர் 2026, 11:30 AM
கோம்பாக்கில் மக்கள் சேவைக்காக 2 நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகள் :  மந்திரி பெசார் அறக்கட்டளை நன்கொடை
கோம்பாக்கில் மக்கள் சேவைக்காக 2 நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகள் :  மந்திரி பெசார் அறக்கட்டளை நன்கொடை
கோம்பாக்கில் மக்கள் சேவைக்காக 2 நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகள் :  மந்திரி பெசார் அறக்கட்டளை நன்கொடை

கோம்பாக், செப் 24 - மந்திரி பெசார் அறக்கட்டளை (Yayasan MBI), கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ கிளினிக்கிற்கு 6,400 ரிங்கிட் பெருமானமுள்ள இரு நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியது.

அம்மாவட்டத்தில் பல் மருத்துவ சேவைத் திட்டத்தின் அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்காக, செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அந்த நன்கொடை செய்யப்பட்டதாக, மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சய்னால் நோர் தெரிவித்தார்.

கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ கிளினிக்கிற்கு இரு நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியப் பின்னர் மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சய்னால் நோர் , மீடியா சிலாங்கூருக்கு பேட்டியளித்தார் படம் : மீடியா சிலாங்கூர்

கோம்பாக் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சமூக நலத் திட்டங்களின்போது அந்த மருத்துவத் தளவாடம் பயன்படுத்தப்படும். அதன் மூலம் மக்களுக்கான பல் மருத்துவ சேவையை மேம்படுத்த முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

படம்: மீடியா சிலாங்கூர்

" மக்கள் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த கோம்பாக்மாவட்ட பல் மருத்துவ கிளினிக்கிற்கு தற்போது பேருந்து ஒன்று உள்ளது.

எனினும், சில இடங்களுக்கு அந்த பேருந்தைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நடமாடும் நற்காலி இருப்பதன் வாயிலாக, உள்ளூர் மக்களுக்கான சேவையை மேலும் விரிவுப்படுத்த முடியும்" என கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ அதிகாரி டாக்டர் இந்தான் எலியானா மொஹமெட் தெரிவித்தார்.

கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ அதிகாரி டாக்டர் இந்தான் எலியானா மொஹமெட் : படம் -மீடியா சிலாங்கூர்

நன்கொடையாக வழங்கப்பட்ட பல் மருத்துவ நாற்காலிகள் சமூக நலத் திட்டங்களுக்காகவும், கிளினிக்கின் அன்றாடத் தேவைக்கும் பயன்படுத்தப்படுமென அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.