பட்டதாரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, இணைய வசதியை வழங்கியது MBI அறக்கட்டளை

28 ஜூலை 2026, 12:59 PM
பட்டதாரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, இணைய வசதியை வழங்கியது MBI அறக்கட்டளை
பட்டதாரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, இணைய வசதியை வழங்கியது MBI அறக்கட்டளை

ஷா ஆலாம்,ஜூலை 28: யாயாசான் மந்திரி பெசார் சிலாங்கூர் (Yayasan MBI) அறக்கட்டளை, 28 பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் மடிக்கணினிகளை வழங்கியது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த கற்றல் வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான வருடாந்திர முயற்சி இதுவென சிலாங்கூர் மெந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அகமட் அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

Ketua Yayasan Menteri Besar Selangor (Pemerbadanan) atau MBI Ahmad Azri Zainal Nor berucap pada Majlis serahan sumbangan komputer riba daripada Yayasan MBI di Bangunan Darul Ehsan pada 28 Julai 2026. Foto NUR ADIBAH AHMAD IZAM/MEDIASELANGOR

இங்குள்ள் டாரூல் ஏசான் கட்டிடத்தில் நடைபெற்ற மடிக்கணினி ஒப்படைப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

"மாநில சட்டமன்ற சேவை மையங்களிலிருந்தும் எங்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே மாணவர்களிடம் நேரடியாக ஒப்படைப்பதற்காக மடிக்கணினிகளை அவர்களிடம் வழங்கியுள்ளோம்.

மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டுமன்றி, ஒரு வருடத்திற்கான இலவச சிலாங்கூர் இணையத் தரவும் (Data Internet Selangor) வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகக் கல்விக்காக இந்த உதவியை அவர்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்," என அகமட் அஸ்ரி ஜைனல் தெரிவித்தார்.

மேலும், இந்த கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

"இவ்வாண்டு எங்களுக்குப் பல விண்ணப்பங்கள் கிடைத்தன. ஆனால், குடும்ப வருமானம் RM4,000-க்கு கீழ் இருக்க வேண்டும் மற்றும் சிலாங்கூர் மாநில அரசின் கீழ் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து, பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) பயில்பவராக இருக்க வேண்டும் என்பதே இதற்கான தகுதிகளாகும்.

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எங்களால் முடிந்தவரை உதவ முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

இந்த மடிக்கணினி உதவியைப் பெற்றவர்களில் 18 வயது மாணவி இஷ்வீனா வில்லியம் ராபர்ட் -டும் அடங்குவார்.

இனி விரிவுரையாளர்கள் கொடுக்கும் பணிகளைச் செய்ய தனது அறைத் தோழியிடம் மடிக்கணினியை இரவலாக வாங்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.

Ishveenaa William Robert, 18, ditemui pada Majlis Serahan Komputer Riba Yayasan MBI di Bangunan Darul Ehsan pada 28 Julai 2026. Foto NUR ADIBAH AHMAD IZAM/MEDIASELANGOR

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.