கோத்தா அங்ஃகிரிக் தொகுதி மாணவர்களுக்கு 8 மடிக்கணினிகள் வழங்கி MBI அறக்கட்டளை உதவி

20 செப்டெம்பர் 2026, 5:28 AM
கோத்தா அங்ஃகிரிக் தொகுதி மாணவர்களுக்கு 8 மடிக்கணினிகள் வழங்கி MBI அறக்கட்டளை உதவி

ஷா ஆலாம், செப் 20 - சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை (Yayasan MBI) , கல்வித் தேவைக்காக மாணவர்களுக்கு 8 மடிக்கணினிகளை வழங்கி உதவியது.

கோத்தா அங்கிரிக் சட்டமன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் அந்த மடிக்கணினிகளைப் பெற்றுக் கொண்டதாக, மாநில இளைஞர் ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

" மாணவர்களின் கற்றலுக்கு மடிக்கணினி அத்தியாவசியமாகிறது. எனினும் அதனை அனைத்து குடும்பங்களும் வாங்கித் தரும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை.

எனவே அக்குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக தங்களின் உதவி அமையும் என நம்புகிறேன்" என நஜ்வான் தமது ஃபேஸ்புக் அகப்பக்கம் வாயிலாக தெரிவித்தார்.

தமது அலுவலகத்தில், கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

மடிக்கணினி பெற்றுக் கொண்ட மாணவர்கள், உயர் கல்வி கூடத்தையும் தொழிற்பயிற்சி கூடங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.