2026 ஃபிஃபா ஆசியான் கிண்ணம் : ஹரிமாவ் மலாயாவின் ஆட்டங்களை RTM நேரடி ஒளிபரப்பு

24 செப்டெம்பர் 2026, 9:41 AM
2026 ஃபிஃபா ஆசியான் கிண்ணம் :  ஹரிமாவ் மலாயாவின் ஆட்டங்களை RTM நேரடி ஒளிபரப்பு

ஷா ஆலாம், செப் 24: 2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா ஆசியான் கிண்ண (Piala ASEAN FIFA 2026) போட்டியில், ஹரிமாவ் மலாயா அணியின் ஆட்டங்களை ஆர்டிஎம்(RTM) நேரடி ஒளிபரப்பு செய்யும்.

அந்த நேரடி ஒளிபரப்பு நாளை நடைபெறவுள்ள வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியுடன் தொடங்கும்.

தேசிய அணியின் ஆட்டங்களை எந்த ஊடக அலைவரிசை நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பது குறித்து ரசிகர்களிடமிருந்து பல கேள்விகள் வந்ததை அடுத்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

" நான் ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹரிமாவ் மலாயா அணியின் போட்டிகளை RTM நேரடி ஒளிபரப்பு செய்யும்," என்று அவர் கூறினார்.

இந்த நேரடி ஒளிபரப்பு மலேசியா, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கும். இப்போட்டியில் களமிறங்கும் ஹரிமாவ் மலாயா அணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்குமாறும் அன்வார் கேட்டுக்கொண்டார்.

" வாருங்கள், நமது நாட்டு அணிக்கு பலத்த ஆதரவை வழங்குவோம்!" என்று அவர் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையிலான காற்பந்துப் போட்டி நாளை ஜகார்த்தாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்று RTM தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.