கோலாலம்பூர்,ஜுன் 25 - ஹரிமாவ் மலாயா அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக தான் ஜெங் ஹோ (Tan Cheng Hoe )நியமிட்டிருப்பதாக FAM மலேசிய காற்பந்து சங்கம் அறிவித்தது.
இம்மாதம் ஒப்பந்தம் முடிவுறும் பீட்டர் க்ளமோவ்ஸ்கிற்குப் (Peter Cklamovski) பதிலாக ஜெங் ஹோ அப்பொறுப்புக்கு அமர்த்தபட்டுள்ளார்.
அனுபவம், செயல்திறன்,சாதனை மற்றும் நாட்டின் காற்பந்து சூழல் குறித்த ஆழமான புரிதல் அடிப்படையில் ஜெங் ஹோ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக மலேசிய காற்பந்து சங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
ஜெங் ஹோ ஏற்கனவே 2017ஆம் ஆண்டிலிருந்து டிசம்ம்பர் 2021 -ஆம் ஆண்டு வரை ஹரிமாவ் மலாயா அணியை வழிநடத்தியிருக்கிறார்.
அக்கால கட்டத்தில் ஹரிமாவ் மலாயா 2018-இல்
AFF சுசுக்கி கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.




