2027 பட்ஜெட்டில் ஊதியம் குறித்து நற்செய்தி இடம்பெறக்கூடும்: மனிதவள அமைச்சர் ரமணன்

22 செப்டெம்பர் 2026, 7:36 AM
2027 பட்ஜெட்டில் ஊதியம் குறித்து நற்செய்தி இடம்பெறக்கூடும்: மனிதவள அமைச்சர் ரமணன்

புத்ராஜெயா, செப். 22: 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஊதியம் தொடர்பான அறிவிப்பு இடம்பெறக்கூடும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

எனினும், இதன் கூடுதல் விவரங்களை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பயிற்றுநர் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி மையத்தின் (CIAST) 17ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள முன்னேற்ற நடவடிக்கைகள் நம்மை ‘வளர்ச்சி அடைந்த நாடு’ என்ற நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் அன்வார் இப்ராஹிம், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அக்டோபர் 9ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.