உடல் உறுப்பு தானத்திற்காக 12 ,575 நோயாளிகள் காத்திருக்கின்றனர்

18 செப்டெம்பர் 2026, 2:06 PM
உடல் உறுப்பு தானத்திற்காக  12 ,575 நோயாளிகள் காத்திருக்கின்றனர்

ஷா ஆலாம், செப் 18 - உடல் உறுப்பு தானத்திற்காக, கடந்த ஜூலை வரை நாட்டில் 12, 575 நோயாளிகள் காத்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் மாற்று சிறுநீரக உறுப்புக்காக காத்திருப்பவர்கள் ஆவர்.

12, 228 பெரியவர்களுக்கும் 307 சிறார்களுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

16 பேர் கல்லீரல் , 14 பேர் இருதயம், 3 பேர் நுரையீரல், 7 பேர் இருதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்.

சிறுநீரக உறுப்புக்காக ஒரு நோயாளி காத்திருக்கும் நேரம் ஐந்தாண்டுகளில் இருந்து 23 ஆண்டுகள் ஆகுமென தேசிய சிறுநீரக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருதயம் மற்றும் நுரையீரலுக்காக காத்திருக்கும் நேரம் 4 மாதங்களில் இருந்து 3.8 மாதங்கள் எடுத்துக் கொள்வதாக தேசிய இருதய கழகத் தகவல் காட்டுகிறது.

இதனிடையே கடந்த ஜூலை வரையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல், கண் விழிப்படலம், எலும்பு, இதய வால்வு, தோள் என 235 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன.

அவற்றில் அதிகமாக 126 கண் விழிப்படலம் பெறப்பட்டதாக தேசிய மாற்று அறுவை சிகிச்சை மையம் தெரிவித்தது.

இவ்வேளையில், கடந்த ஜூலை வரை 4 லட்சத்து 36 ஆயிரத்து 542 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதி வழங்கியுள்ளனர்.

உடல் உறுப்பு தானம், உயிரோடு இருக்கும்போது செய்யப்படும் தானம் மற்றொன்று இறப்பிற்குப் பின்னர் செய்யப்படும் தானம் என இரு வகைப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.