மின்சாரக் கட்டண உயர்வு: உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆராய சிறப்புக் கூட்டம்

16 செப்டெம்பர் 2026, 8:47 AM
மின்சாரக் கட்டண உயர்வு: உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆராய சிறப்புக் கூட்டம்

கோலாலம்பூர், செப்.16 – மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சுமையைக் குறைக்க உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆராய நாளை சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர்மாற்ற அமைச்சகம் (PETRA), எரிசக்தி ஆணையம் (ST), தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் நிதி அமைச்சகம் (MOF) ஆகியவை கலந்து கொள்ளும்.

இதனை பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மக்கள் வெளிப்படுத்தி வரும் குறைகளைத் தாம் செவிமடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அன்வார், இந்த விவகாரத்துக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு, விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

அதேவேளையில், பெரும்பாலான மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாதத்துக்கு 600 கிலோவாட்-மணி (kWh) அல்லது அதற்கும் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சுமார் 80 விழுக்காடு பயனீட்டாளர்கள், இந்த ஆண்டு அதிகரித்துள்ள எரிபொருள் கட்டண விகித மாற்றத்திலிருந்து தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.

எனினும், அண்மைக்காலமாக நிலவும் புகைமூட்டம் மற்றும் அதிக வெப்பமான வானிலை காரணமாக சில குடும்பங்களின் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து நாளை சிறப்புக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.