சுற்றுச் சூழலை பேணும் ஜி.எம் கிள்ளானின் சமூகத் திட்டம்

19 செப்டெம்பர் 2026, 9:36 AM
சுற்றுச் சூழலை பேணும் ஜி.எம் கிள்ளானின் சமூகத் திட்டம்
சுற்றுச் சூழலை பேணும் ஜி.எம் கிள்ளானின் சமூகத் திட்டம்
சுற்றுச் சூழலை பேணும் ஜி.எம் கிள்ளானின் சமூகத் திட்டம்
சுற்றுச் சூழலை பேணும் ஜி.எம் கிள்ளானின் சமூகத் திட்டம்

கிள்ளான், செப் 19 : ஜி.எம் கிள்ளான் மொத்த வியாபார மையம் (GM Klang Wholesale City ), இன்று பண்டார் பொட்டானிக் (Bandar Botanic) பகுதியில் சுற்றுச்சூழல் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

'ஃபன் & ஃப்ரெஷன் அப்! 2.0' (Fun & Freshen Up! 2.0) திட்டத்தின் மூலம் மக்களிடையே அம்மையம் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மலேசிய மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் 'எர்த் வாரியர்ஸ்' (Persatuan Pahlawan Bumi) அமைப்பின் ஆதரவோடு ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் திட்டம், மலேசிய தூய்மை தினம் மற்றும் உலக புவி வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.

இம்முறை தூய்மைப் பணிகள் ஜிஎம் கிள்ளான் வளாகத்தோடு நின்றுவிடாமல், அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டதாக

ஜிஎம் கிள்ளான் நிறுவனத்தின் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மூத்த நிர்வாகி நோர்சுஹைடா ஒத்மான் தெரிவித்தார்.

ஜிஎம் கிள்ளான் நிறுவனத்தின் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மூத்த நிர்வாகி நோர்சுஹைடா ஒத்மான் . படம் ; மீடியா சிலாங்கூர்

"நாங்கள் வெறும் குப்பைகளை மட்டும் சேகரிக்கவில்லை; மாறாக அதைச் செய்வதற்கு வெட்கப்படக் கூடாது என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே விதைக்கிறோம்.

இந்தத் திட்டத்திற்கு வணிகர்கள் மட்டுமின்றி, உள்ளூர் சமூகத்தினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆரம்பத்தில் 30 தன்னார்வலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், தற்போது 50-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். பிள்ளைகள் எப்போதும் தொழில்நுட்ப கருவிகளிலேயே (gadget) மூழ்கிவிடாமல் இருக்க, தன்னார்வலர்கள் தங்களது பிள்ளைகளையும் இத்துப்புரவுப் பணிகளுக்கு அழைத்து வர ஊக்குவிக்கிறோம்," என்று இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டம், தூய்மை நடவடிக்கைகள், வசதி குறைந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் சமூக விழாக்கள் என ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஒரு பகுதியின் தூய்மையைப் பேணிக் காக்கும் பொறுப்பை முழுமையாக ஊராட்சி மன்ற (PBT)பணியாளர்களிடம் மட்டுமே ஒப்படைத்துவிடக் கூடாது என கிள்ளான் அரச மாநகரக் கழகத்தின் (MBDK) நகராண்மைக் கழக உறுப்பினர் அஸ்வான் ஆதாம் தெரிவித்தார்.

கிள்ளான் அரச மாநகரக் கழகத்தின் (MBDK) நகராண்மைக் கழக உறுப்பினர் அஸ்வான் ஆதாம் : படம் : மீடியா சிலாங்கூர்

" 'நமது பகுதி, நமது பொறுப்பு' என்ற வாசகத்திற்கு ஏற்ப, அரசு சாரா அமைப்புகள் பங்குபெறும் இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இதில் இன்னும் அதிகமான உள்ளூர் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்." என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்கும், அவர்கள் கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டும் பழக்கத்தைத் தவிர்ப்பதற்கும் இத்தகைய தூய்மைப் பணிகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம் என்று அஸ்வான் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.