புகை மூட்டம் : சரவாக்கில் 647 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது

4 செப்டெம்பர் 2026, 1:13 PM
புகை மூட்டம் : சரவாக்கில்  647 பள்ளிகள்  5 நாட்களுக்கு மூடப்படுகிறது

கூச்சிங், செப் 4 : வரும் திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களுக்கு சரவாக்கில் உள்ள 647 ஆரம்ப - இடைநிலைப் பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்படும்.

அம்மாநிலத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதை அடுத்து , மாநிலக் கல்வித் துறை அந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

அந்நடவடிக்கை, 563 ஆரம்ப பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 8, 477 மாணவர்களையும், 84 இடைநிலைப் பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 90, 082 மாணவர்களையும் உட்படுத்தியிருக்கும்.

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் கால கட்டத்தில் கற்றல் கற்பித்தல் நடைமுறைகள் வீட்டிலிருந்தே மேற்கொள்ளப்படுமென, அம்மாநிலக் கல்வித் துறை அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

முன்னதாக, சரவாக் செரியானில், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியதை அடுத்து அப்பகுதியில், பேரிடர் அவசர நிலையை பிரகடனப்படுத்த மாமன்னர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.