பண்டான் இண்டாவில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இலவசப் பெட்ரோல்

2 செப்டெம்பர் 2026, 7:17 AM
பண்டான் இண்டாவில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இலவசப் பெட்ரோல்

அம்பாங், செப். 2: பண்டான் இண்டாவில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவோர், இலவசப் பெட்ரோல் நிரப்பும் திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

பண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் இத்திட்டத்தை ஏற்பாடு செய்தார். அப்பகுதியில் முன்னெடுத்து வரும் வழக்கமான மக்கள் நலத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

தினசரி வருமானத்திற்காக நீண்ட நேரம் சாலைகளில் பயணிக்கும் இந்த தொழிலாளர்கள், அதிகரித்து வரும் பெட்ரோல் செலவினால் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்கின்றனர்.

அவர்களின் அன்றாடச் செலவுச் சுமையை ஓரளவுக்குக் குறைக்க இந்த உதவி கைகொடுக்கும் என இஷாம் ஹாஷிம் நம்பிக்கை தெரிவித்தார்.

பண்டான் இண்டா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.