அனைத்துலக காற்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வுப் பெறுகிறார் மெஸ்ஸி

31 ஆகஸ்ட் 2026, 3:52 PM
அனைத்துலக காற்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வுப் பெறுகிறார் மெஸ்ஸி

மியாமி , ஆகஸ்ட் 31- 39 வயதான காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அனைத்துலக காற்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வழிநடத்திய பிறகு , அவர் இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

"இது எனது ஆன்மாவின் ஆழத்தில் வலியை ஏற்படுத்தும் ஒரு முடிவுதான், ஆனால் இதுவே சரியான நேரம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்," என்று 39 வயதான மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.

"நாங்கள் அனைத்தையும் , வென்ற கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் நான் எப்போதும் எனது முழு பங்களிப்பையும் அளித்தேன் என்று சத்தியம் செய்கிறேன்;

மேலும் இந்த ஜெர்சிக்காக நான் எப்போதும் போராடி எனது அனைத்தையும் கொடுத்தேன்," என்று அவர் மேலும் கூறினார்.

டோஹாவில் நடந்த 2022 இறுதிப் போட்டியில் பிரான்சுக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்று அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை ஏந்த வைத்தார் மெஸ்ஸி .

ஆனால் 2026 இறுதிப் போட்டியில் அவரது அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியடைந்தது.

ஆகஸ்ட் மாதம் அவரது தந்தை ஜார்ஜ் மறைந்ததைத் தொடர்ந்து, மெஸ்ஸி எந்த வகையான காற்பந்தாட்டத்தையும் "இன்னும் நீண்ட காலத்திற்கு" தொடர்ந்து விளையாடுவது குறித்து தனக்கு "தீவிர சந்தேகம்" இருப்பதாகக் கூறியிருந்தார்.

முக்கிய லீக் காற்பந்து கிளப்பான இண்டர் மியாமி உடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் 2028 பருவம் இறுதி வரை நீடிக்கிறது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.