ரோலர் கோஸ்டர் விபத்து: மாநில அரசு தொழில்நுட்ப அறிக்கைக்காக காத்திருக்கிறது

26 ஆகஸ்ட் 2026, 9:34 AM
ரோலர் கோஸ்டர் விபத்து:  மாநில அரசு தொழில்நுட்ப அறிக்கைக்காக காத்திருக்கிறது
ரோலர் கோஸ்டர் விபத்து:  மாநில அரசு தொழில்நுட்ப அறிக்கைக்காக காத்திருக்கிறது

செப்பாங், ஆகஸ்ட் 21 - கடந்த சனிக்கிழமை , சன்வே லகூன் விளையாட்டுப் பூங்காவில் நிகழ்ந்த ரோல்லர் கோஸ்டர் விபத்துக்கான தொழில்நுப அறிக்கைக்காக சிலாங்கூர் மாநில அரசு காத்திருக்கிறது.

முழு விசாரணையை மேற்கொள்ள அந்த அறிக்கை முக்கியமானதாகக் கருதுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை அந்த அறிக்கையே முடிவு செய்யுமென அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப அறிக்கை கிடைத்தவுடன், போலீஸ் முழு விசாரணையை நடத்துமென அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை சன்வே லகூனில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்தில் , அதில் சவாரி செய்த பத்து பேர் காயமடைந்தனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.