கோலா லங்காட், ஆகஸ்ட் 19 — தெலோக் பாங்லிமா காராங், பத்து 9, ஜாலான் எங்ஙாங்கில் சட்டவிரோதக் குப்பை தளமாக செயல்பட்ட இடத்தை கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) சுத்தம் செய்தது. அத்துடன் அப்பகுதியில் குப்பைகளைக் கொட்டத் தடை விதிக்கும் எச்சரிக்கைப் பலகையையும் நிறுவியது.
MPKL திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையின் பணிக்குழு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்புரவுப் பணி காலை 10 மணி முதல் நண்பகல் வரை நடைபெற்றது.

குப்பைகளைக் கொட்டுவது தொடர்பான குற்றங்களுக்கு, 2007ஆம் ஆண்டு MDKL குப்பைகளைச் சேகரித்தல், அகற்றுதல் மற்றும் கழிவுகளை நிர்வகித்தல் தொடர்பான துணைச் சட்டம் 4-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
உள்ளூர் சமூகத்தின் நலன் கருதி சுற்றுப்புறத்தை எப்போதும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் MPKL தொடர்ந்து உறுதி கொண்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.







