மின் விநியோகத் தடைக்குப் பிறகு கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது

19 ஆகஸ்ட் 2026, 3:10 AM
மின் விநியோகத் தடைக்குப் பிறகு கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், ஆகஸ்ட் 19 — புத்ரா ஹைட்ஸ் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கிளானா ஜெயா ரயில் பாதையில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.

புத்ரா ஹைட்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையை சரிசெய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக Rapid KL தெரிவித்துள்ளது.

எனினும், ரயில் சேவை இடைவெளி மற்றும் பயண நேரங்கள் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கலாம் என்றும், ரயில்களின் சேவை படிப்படியாகச் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கிளானா ஜெயா ரயில் பாதையின் சமீபத்திய சேவை நிலவரங்களை அறிந்து கொள்வதற்காகப், பயணிகள் Rapid KL-இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது MyRapid PULSE செயலியைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.