புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்த முழு அறிக்கை ஆண்டிறுதியில் வெளியிடப்படும்

17 ஆகஸ்ட் 2026, 2:42 PM
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்த முழு அறிக்கை ஆண்டிறுதியில் வெளியிடப்படும்
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்த முழு அறிக்கை ஆண்டிறுதியில் வெளியிடப்படும்
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்த முழு அறிக்கை ஆண்டிறுதியில் வெளியிடப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 17 : கடந்த ஆண்டு புத்ரா ஹைட்ஸ் (Putra Heights) பகுதியில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த முழு அறிக்கை, இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையை வெளியிட மாநில அரசு தயாராக இருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி கூறினார்.

எனினும், இந்த விவகாரம் கூட்டரசு அரசின் சில அமைப்புகளையும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடையது என்பதாலும், கூட்டரசு அரசின் முடிவுக்காக மாநில அரசு இன்னும் காத்திருக்கிறது.

"நாங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அமைச்சரவை இதை பொதுமக்களுக்கு வெளியிட அனுமதிக்குமா என்ற கூட்டரசு அரசின் முடிவுக்காக மட்டுமே நான் காத்திருக்கிறேன்.""எங்களைப் பொறுத்தவரை இதை வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என அமிரூதின் ஷாரி தெரிவித்தார்.

SmartSel Sdn Bhd மற்றும் PG Linkaran Fibre Sdn Bhd நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றத்தை பார்வையிட்டதோடு, சைபர்ஜெயா ஃபைபர் (fibre) திட்ட நிறைவு விழாவிலும் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கூட்டரசு அரசிடமிருந்து எந்த முடிவும் வராவிட்டால், மாநில அரசின் அதிகார வரம்பின் அடிப்படையில் எந்தத் தகவல்களை வெளியிடலாம் என்பதைத் தீர்மானிக்க மாநில சட்ட ஆலோசகரின் கருத்து கேட்கப்படுமென மந்திரி பெசார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு, அப்பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.