சுக்மா 2026: சிலாங்கூரின் எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்கும் சிறந்த தளம்

16 ஆகஸ்ட் 2026, 3:00 AM
சுக்மா 2026: சிலாங்கூரின் எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்கும் சிறந்த தளம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 16 — சுக்மா 2026, சிலாங்கூர் மாநிலத்தில் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான முக்கிய தளமாக அமைந்துள்ளது.

இதனை சிலாங்கூர் சுக்மா அணித் தலைவர் அப்பாஸ் அஸ்மி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தரமான விளையாட்டு வீரர்களுக்கான பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு மாநிலத்தின் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.

விளையாட்டுத் துறையில் தற்போதுள்ள முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அவர்களுக்குப் பதிலாகப் புதிய வீரர்களை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அப்பாஸ் வலியுறுத்தினார்.

மேலும், இளம் விளையாட்டு வீரர்களுக்கு அதிகமான போட்டி அனுபவங்களும் வெளிப்பாடுகளும் வழங்கப்பட வேண்டும்.

அதன் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தி, எதிர்காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பெயரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

சிலாங்கூரில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநில விளையாட்டுச் சங்கங்கள் மட்டுமின்றி பள்ளி அளவிலான போட்டிகளின் வாயிலாகவும் புதிய திறமைகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.