ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு குறைந்துள்ளது

31 ஜூலை 2026, 9:04 AM
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு குறைந்துள்ளது

ஆஸ்திரேலியா, ஜூலை 31 - உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை அமலுக்கு வந்த முதல் மூன்று மாதங்களில், சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் தடை அமல்படுத்தப்பட்டபோது சமூக ஊடகக் கணக்கு வைத்துள்ள 16 வயதுக்குட்பட்டவர்களின் விகிதம் 52.4 சதவீதமாக இருந்த நிலையில், அது மார்ச் மாதத்தில் 42.1 சதவீமாகக் குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, தடையை நடைமுறைப்படுத்தத் தவறிய முகநூல், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக் மற்றும் யூடியூப் ஆகிய தளங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கடந்த மார்ச் மாதம் இ-சேஃப்டி கமிஷனர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சட்டங்களின்படி, 16 வயதுக்குட்பட்டவர்கள் கணக்குகளை வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் முறையாகத் தடுக்கத் தவறும் தளங்களுக்கு 4 கோடியே 95 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 14 கோடியே 22 லட்சம் ரிங்கிட்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், மத்திய அரசு, அதிகபட்ச அபராதத் தொகையை இரு மடங்காக அதாவது 9 கோடியே 90 லட்சம் ஆஸ்திரேலிய டாலராக (சுமார் 28 கோடியே 45 லட்சம் ரிங்கிட்) உயர்த்தப் போவதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தடை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருந்த 16 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானோர், தளங்கள் முறையான வயதுச் சரிபார்ப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தத் தவறியதன் காரணமாக மார்ச் மாதத்திலும் கணக்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் அல்லது புதிய கணக்குகளை உருவாக்கியுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.