கோலாலம்பூர், ஜூலை 21 — செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிவிரைவான தொழில்நுட்ப மாற்றங்களைக் கையாளும் வகையில், நாட்டின் நிர்வாகச் சட்டக் கட்டமைப்புகளும் கொள்கைகளும் காலத்திற்கு ஏற்ப அமைத்து கொள்வது அவசியம் எனத் தகவல் தொடர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாட்டின் போட்டித் தன்மையை அதிகரிக்கவும் இத்தகைய அணுகுமுறை மிக முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
"தொழில்நுட்பத்திற்கு இணையான திறமையான நிர்வாகத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மாற்றங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்ட சட்டக் கட்டமைப்பு இதற்குத் தேவைப்படுகிறது.
அதேவேளையில், புதுமைகளை ஊக்குவிக்கும் சமநிலையோடும், துறைசார் நிறுவனங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும் இது அமைய வேண்டும்.
எதிர்காலச் சவால்களை எந்தவொரு அரசாங்கமோ, ஒழுங்குமுறை அமைப்போ அல்லது சர்வதேச நிறுவனமோ தனியாகக் கையாண்டுவிட முடியாது. இது எல்லைகள், துறைகள் மற்றும் பிரிவுகளைக் கடந்தது," என்று அவர் உரையாற்றினார்.
இதனிடையே, நாட்டின் டிஜிட்டல் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, பரிந்துரைகளையும் முடிவுகளையும் அமைச்சரவை மற்றும் மக்களவைப் பார்வைக்குக் கொண்டு செல்ல மலேசியத் தகவல் தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் ஆணையம் தயாராக இருப்பதாக ஃபஹ்மி கூறினார்.
உதாரணமாக, இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் குழந்தைகள் சுரண்டப்படுவதைத் தடுப்பது தொடர்பான '2025 இணையப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்களை' உருவாக்க முந்தைய IRC மாநாட்டின் முடிவுகள் பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டார.
"தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மசோதாவைத் தயார் செய்யும் பணிகளில் அமைச்சரவை ஈடுபட்டு வருகிறது.







