புத்ராஜெயா, 13 ஜூலை – இந்த ஆண்டிற்கான எஸ்.பி.எம் மறுதேர்வு (SPMU) நாளை (ஜூலை 14) தொடங்கி எதிர்வரும் ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மலாய் மொழி, வரலாறு மற்றும் கணிதம் ஆகிய மூன்று முக்கிய பாடங்களை உள்ளடக்கிய மறுதேர்வு (SPMU) நாடு முழுவதும் உள்ள 188 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை மொத்தம் 12,974 பேர் எழுதவுள்ளனர்.
தேர்வு நடைபெறும் தேதி, நேரம், பாடக் குறியீடு, வினாத்தாள் விபரங்கள் மற்றும் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள தேர்வு கால அட்டவணையை (Jadual waktu) சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்வு எழுதுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணையைத் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கமான lp.moe.gov.my என்ற இணைப்பின் வழி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.







