உலகக் கிண்ணம் : நாட்டின் உணவுத் துறை RM210 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும்

28 ஜூன் 2026, 6:10 AM
உலகக் கிண்ணம் : நாட்டின் உணவுத் துறை RM210 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும்

கோலாலம்பூர், ஜூன் 28 - மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் 2026 ஃபீஃபா உலகக் கிண்ண காற்பந்து மோகம், 120 கோடி ரிங்கிட்டிலிருந்து 210 கோடி ரிங்கிட் வரையில் வருவாயை ஈட்டித் தர முடியும்.

குறிப்பாக உணவு-பான தயாரிப்புத் துறை, அந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டியினால் லாபத்தை ஈட்ட முடியுமென மலேசிய அறிவியல் தொழில்நுட்ப பேராசியர் எமரிட்டஸ் டாக்டர் பார்ஜோயாய் பர்டாய் தெரிவித்தார்.

உலகக் கிண்ண ஆட்டங்களின் நேரலையைப் பார்ப்பதற்காக, மலேசிய காற்பந்து ரசிகர்கள் அதிகமாக மாமாக் கடைகள், கேஃபே (cafe), உணவகம் ஆகிய இடங்களில் அதிகம் கூடுவர்.

அதோடு வீடுகளில் இரவு நேரம் ஆட்டங்களைப் பார்க்கும் போது, வீட்டிற்கு உணவு அனுப்பும் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

எனினும், இது உலகக் கிண்ண காற்பந்து ஆட்டங்கள் நடைபெறும் கால கட்டத்தில் மட்டுமே நீடிக்கும் தற்காலிக வருவாய் உயர்வு ஆகுமென பார்ஜோயாய் கூறினார்.

இது ஒரு முதலீடாக இல்லாமல் மக்கள் அதிகம் செலவு செய்வதை உந்தச் செய்யும் ஒரு வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக அமைவதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.