கன்சாஸ் சிட்டி, ஜூன் 17 - அல்ஜிரியாவுக்கு எதிரான குழு நிலையிலான தொடக்க ஆட்டத்தில் ஹட்ரிக் கோல்களைப் புகுத்தி உலகக் கிண்ண காற்பந்தாட்ட அரங்கில் மேலுமொரு சாதனையைப் படைத்திருக்கின்றார் லியோனல் மெஸ்ஸி.
38 வயதாகும் அந்த காற்பந்து நட்சத்திரம், ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கான முதல் கோலை அடித்த வேளையில், பிற்பாதியில் 60,76-வது நிமிடங்களில் மேலும் இரு கோல்களைப் புகுத்தினார்.
இந்த ஹட்ரிக் கோல்களின் வாயிலாக 8 முறை பலோன் டி'ஓர் ( Ballon d'Or ) விருதினை வென்ற மெஸ்ஸி உலகக் கிண்ண இறுதியாட்டங்களில் புகுத்திய கோல்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்தது.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களைப் புகுத்திய ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோசெ-வின் ( Miroslav Klose ) சாதனையை ஈடு செய்திருக்கிறார் மெஸ்ஸி.







