ஜப்பானின் வடகிழக்கை உலுக்கியது 6.1 magnitude நிலநடுக்கம்;சுனாமி எச்சரிக்கை இல்லை

28 ஜூன் 2026, 2:24 AM
ஜப்பானின் வடகிழக்கை உலுக்கியது 6.1 magnitude நிலநடுக்கம்;சுனாமி எச்சரிக்கை இல்லை

தொக்யோ,ஜூன் 28 - அதிகாலை நேரத்தில் ஜப்பானின் வடகிழக்குப் பகுதியை 6.1 magnitude அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என வானிலைத் துறை தெரிவித்தது.

இவாதே (Iwate) மாகாணத்திற்கு அப்பால் பசிபிக்கில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநிலடுக்கம் மையமிட்டிருந்தது.

இப்பேரிடரை அடுத்து, அமோரியில் (Aomori) உள்ள ஹிகாஷிடோரி (Higashidori) அணு உலையிலும், மியாகி (Miyagi) மாகாணத்திலுள்ள ஒனாகாவா (Onagawa) அணு உலையிலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதே பகுதியை 7.2 magnitude அளவிலான நிலநடுக்கம் தாக்கிய சில தினங்களிலே தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முந்தைய நிலநடுக்கத்தில் 10 பேர் காயமடைந்த வேளை, அதிவேக ரயில் சேவைகள் தடைப்பட்டதோடு, பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.