பந்திங், ஜூன் 26 - மோரிப் கடற்கரை ஜூலை முதலாம் தேதி புதுத் தோற்றம் பெறும்.
நான்கு கோடியே 70 லட்சம் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அந்த சுற்றுலாப் பகுதியின் புதிய தோற்றத்துக்கான தரம் உயர்த்தும் பணிகள் ஜூலை முதலாம் தேதி பூர்த்தி அடையும்.
தரம் உயர்த்தும் பணிகள் ஜூலை முதலாம் தேதி முடிவுறத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அனைத்துப் பகுதியிலும் பணிகள் முழுமைப் பெற்றப் பின்னரே, பொது மக்கள் மோரிப் கடற்கரையை முழுமையாக சுற்றிப் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படுமென குவாலா லங்காட் நீர் பாசண வடிகால் துறையின் பொறியியலாளர் மொஹமட் ஹஸ்ருல் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
புதியத் தோற்றத்தின் கீழ் மோரிப் கடற்கரையில்
திறந்த வெளி கடைகள், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுத் தளம், நடைப் பகுதி, அழகிய இயற்கை எழில் அமைப்பு போன்றவை ஏற்படுத்தப்பட்டிருக்கும்.







