கோல லங்காட் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

9 மார்ச் 2026, 2:37 AM
கோல லங்காட் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

ஷா ஆலம், மார்ச் 9 – கோல லங்காட் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மாநில அரசு RM55 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடல் அரிப்பு கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், மோரிப் கடற்கரை, சுனாங் கடற்கரை மற்றும் தஞ்சோங் சிப்பாட் கடற்கரை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் கடல் அரிப்பு பிரச்சனைகளைத் தீர்க்க கடலோரப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடலோரப் பாதுகாப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் தொடர்பான இரண்டு திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கோல லங்காட் மாவட்ட அதிகாரி தெங்கு ரோஹனா தெங்கு நவாவி தெரிவித்தார்.

“RM47.3 மில்லியன் மதிப்பிலான மோரிப் கடற்கரை பாதுகாப்புத் திட்டம் 2026 ஜூலை 1 அன்று முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மேலும், கனமழை மற்றும் கடல் பெருக்கு நேரங்களில் நீர் ஓட்டத்தைச் சிறப்பாக கட்டுப்படுத்த ஆற்று வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்காக RM2.45 மில்லியன் செலவில் செயல்படுத்தப்பட்ட சுங்கை பந்திங் வெள்ளத் தணிப்பு திட்டம் 2025 அக்டோபர் 14 அன்று நிறைவடைந்தது,” என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சுனாங் மற்றும் தஞ்சோங் சிப்பாட் கடற்கரைகளை மேம்படுத்துவதற்கும் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்துவதற்குமான திட்டம் RM7.9 மில்லியன் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2026 ஜூலை 21 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கோல லங்காட் மாவட்டத்தில் கடலோர அரிப்பு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குமான மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.