முதியோருக்கான வேலைவாய்ப்பு: பொருத்தமான வழிமுறைகளை ஆராய்கிறது சிலாங்கூர் அரசு

23 ஜூன் 2026, 3:58 AM
முதியோருக்கான வேலைவாய்ப்பு: பொருத்தமான வழிமுறைகளை ஆராய்கிறது சிலாங்கூர் அரசு

ஷா ஆலம், ஜூன் 23 – சிலாங்கூர் மாநிலம் முதியோர் அதிகம் உள்ள மாநிலமாக உருவெடுத்து வரும் வேளையில், அதற்குப் பொருத்தமான முன் நடவடிக்கையாக முதியோர்கள் வேலைகளில் ஈடுபடுவதற்கான சிறந்த வழிமுறைகளை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்த வேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது முதியோர்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என மாநில நல்வாழ்வுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி குறிப்பிட்டார். அதே வேளையில், இதனால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அவர்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதும் அவசியம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சிலாங்கூர் மாநிலம் முதியோர் அதிகள் உள்ள நிலையை நோக்கிச் செல்வது குறித்த கவலையை எழுப்பிய பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் சீ, முதியோர்களைத் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார். இப்பரிந்துரை மிகவும் முக்கியமானது என்றும் இது ஏற்கனவே முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என அன்ஃபால்கூறினார்.

மேலும், முதியோர்களுக்கான 'ஸ்கிம் மெஸ்ரா ஊசியா எமாஸ்' (Skim Mesra Usia Emas) திட்டத்திற்கான விண்ணப்பங்கள், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இதற்கிடையில், குழந்தைகளைப் பராமரிக்கும் மையங்களை எளிதாகக் கண்டறிவதற்கான ஓர் ஒருங்கிணைந்த தளத்தை (Childcare matching platform) உருவாக்குவது குறித்த ஆலோசனையையும் மாநில அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அன்ஃபால் தெரிவித்தார்.

மக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில்,(Single Window) முறை மூலமாக அரசு உதவிகளை வழங்குமாறு பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் நூருல் சியஸ்வானி நோ முன்வைத்த பரிந்துரையைத் தாம் வரவேற்பதாகவும், அதனைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.