ஷா ஆலம், ஜூன் 21: சுபாங் ஜெயா, தாமான் பூச்சோங் பிரிமா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் புகார் பெறப்பட்டது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்ததார்.
விசாரணையில் எவ்வித சொத்து இழப்போ சேதமோ ஏற்படவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சுபாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தை 03-7862 7222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





