கோலாலம்பூர், நவ 5- தைவானைச் சேர்ந்த ஊடகப் பிரபலம் ஒருவர் கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டது தொடர்பில், உள்ளூர் ராப் பாடகர் Namewee போலீசில் சரணடைந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை, தான் காவல் நிலையத்தில் இருப்பது போலான காணொளி ஒன்றை, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காவல்துறையின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்று குறிப்பிட்டுள்ள Namewee, ஒவ்வொரு முறையும் காவல்துறையின் விசாரணைகளுக்குத் தாமாகவே முன்வந்து சரணடைந்திருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, தைவான் ஊடகப் பிரபலமான Hsieh Yun-hsin, தங்கும் விடுதி ஒன்றில் இறந்து காணப்படுவதற்கு முன்னர், அவர் கடைசியாகச் சந்தித்த நபர் Namewee என்பதைப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கொலை குற்றமாக வகைப்படுத்தப்படும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் கொண்டு விசாரிக்கப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




