கோத்தா கெமுனிங் தந்தையர் தின பௌலிங் திட்டம்: குடும்ப உறவுகளை வலுப்படுத்தியது

20 ஜூன் 2026, 5:23 AM
கோத்தா கெமுனிங் தந்தையர் தின பௌலிங் திட்டம்: குடும்ப உறவுகளை வலுப்படுத்தியது
கோத்தா கெமுனிங் தந்தையர் தின பௌலிங் திட்டம்: குடும்ப உறவுகளை வலுப்படுத்தியது
கோத்தா கெமுனிங் தந்தையர் தின பௌலிங் திட்டம்: குடும்ப உறவுகளை வலுப்படுத்தியது

ஷா ஆலாம், ஜூன் 20 — கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 'தந்தையர்களுடன் பௌலிங் 2026' (Program Bowling Bersama Bapa 2026) திட்டம், தந்தையர் தினத்தைக் கொண்டாடும் வேளையில் தந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

நேற்று முன்தினம் ஷா ஆலாமில் உள்ள 'ஆலம் லேன்ஸ்' (Alam Lanes) பௌலிங் மையத்தில் விளையாட்டின் மூலம் உறவை வலுப்படுத்துதல் ( Sukan Santai, Ikatan Mesra) எனும் கருப்பொருளில் நடைபெற்ற இப்போட்டியில், தந்தையர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துக் கொண்டனர்.

ஆரோக்கியமான, இணக்கமான குடும்பத்தை உருவாக்குவதில் தந்தையர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் பாராட்டும் விதமாக இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிராகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும், குடும்ப அமைப்பின் முக்கியத் தூணாகவும் விளங்கும் தந்தையர்களின் தியாகங்களை அங்கீகரிக்கத் தந்தையர் தினம் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய திட்டங்கள் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது என்றும், எதிர்காலத்தில் இத்தகைய சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கத் தமது அலுவலகம் உறுதி கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.