ஷா ஆலாம், ஜூன் 17: சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் இன்று மதியம் 2 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வமைப்பின் தகவல்படி, கெடாவில் லங்காவி, யான், பெண்டாங், கோலா மூடா, சிக் மற்றும் பாலிங் ஆகிய பகுதிகளிலும், பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாடாங் பத்தாங் மற்றும் முவாலிம் ஆகிய இடங்களிலும் இதே போன்ற வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங்கில் உள்ள பெந்தோங் மற்றும் ஜொகூரில் தங்காக்க், மூவார், பத்து பகாட், குளுவாங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய சில பகுதிகளும் இதே வானிலையை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையானது ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கையாகும். இது வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்," என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.







