ஷா ஆலம், ஜூன் 19: சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 5:00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை துறை (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்மலேசியா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்கள் முழுவதும் மற்றும் கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் இதே போன்ற வானிலை எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தொடர்பான இந்த எச்சரிக்கையானது குறுகிய கால அடிப்படையிலானது என்றும், இதன் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படும் நேரத்திலிருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தற்போதைய வானிலை குறித்த துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் 'myCuaca' செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.









