கோலாலம்பூர், ஜூன் 7: ஊடகத் துறையை அச்சுறுத்தும் ஒன்றாக அல்லாமல், ஊடக நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு உதவியாளராகவே செயற்கை நுண்ணறிவை (AI) மீடியா சிலாங்கூர் (Media Selangor) கருதுகிறது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது, மாறாகப் பணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அதனைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மீடியா சிலாங்கூர் தலைமைச் செயல் அதிகாரி முகமட் ஃபரீட் முகமது ஆஷாரி தெரிவித்தார்.
“மீடியா சிலாங்கூரில், AI-ஐ ஒரு உதவியாளராகவே நாங்கள் கருதுகிறோம், நாம் AI-யுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதனை ஒரு அச்சுறுத்தலாக நாங்கள் பார்க்கவில்லை; ஏனென்றால், காலப்போக்கில் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் AI ஆக்கிரமிக்கவே செய்யும்,” என்று கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி (PBAKL) 2026-ஐ முன்னிட்டு சிலாங்கூர் பெவிலியனில் நேற்று நடைபெற்ற 'Hati & Minda: Edisi Pemimpin' அமர்வில் அவர் கூறினார்.
நிறுவனத்தில் AI-இன் பயன்பாடானது, செய்திகளைச் சுருக்கமாக எழுதுதல், காணொளி மற்றும் படங்களை உருவாக்குதல், மற்றும் துறை சார்ந்த தொழில்நுட்ப நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்தவும், தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களில் பிழைகளைத் தவிர்க்கவும் மனிதர்களின் சரிபார்ப்பு முறை தொடர்ந்து அவசியமாகவே இருக்கும் என்றும் முகமட் ஃபரீட் வலியுறுத்தினார்.
மேலும், மீடியா சிலாங்கூர் ஒருங்கிணைந்த வேலை அணுகுமுறையின் (convergence) மூலம் தனது செயல்பாடுகளை உருமாற்றம் செய்து வருவதாகவும், இதன்வழி செய்தியாளர்கள் எழுத்து, காணொளி பதிவு மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற பல திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
திறன்களை மேம்படுத்தும் மற்றும் மறுபயிற்சி அளிக்கும் கலாச்சாரம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக RM100 வரையிலான புத்தகக் கொள்முதல் கோரிக்கைகள் மற்றும் துறை கூட்டங்களில் புத்தகங்கள் குறித்த கருத்துப் பகிர்வு அமர்வுகளும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி வழங்கலை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) மீடியா சிலாங்கூர் பயன்படுத்துகிறது
7 ஜூன் 2026, 5:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசாங்கம் புதிய திட்டங்களை வகுக்கிறது
Shalini Rajamogun
29 மே 2026

national
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு முறையான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அவசியம்
Shalini Rajamogun
18 மார்ச் 2026

national
அனைத்துப் பகுதி மக்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியா சிலாங்கூர் தீவிரம்
Shalini Rajamogun, Nazli Ibrahim
7 ஜூன் 2026

national
சமூக ஊடகப் பாதிப்புகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க வாசிப்புப் பழக்கம் அவசியம் – மீடியா சிலாங்கூர்
Shalini Rajamogun, Nazli Ibrahim
7 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



