போர்ட் டிக்சன், ஜூன் 5: இங்குள்ள ஜாலான் பந்தாய், பத்து 4-இல் உள்ள ஒரு ஹோட்டல் ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் நேற்றுக் குளிக்கச் சென்ற நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 7.26 மணியளவில் போர்ட் டிக்சன் மருத்துவமனையிலிருந்து தங்களுக்குப் புகார் கிடைத்ததாக போர்ட் டிக்சன் மாவட்ட துணை போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் ருஸ்லான் மாட் கிப் தெரிவித்தார்.
மாலை 5.30 மணியளவில், சிறுவன் தனது மூன்று உடன்பிறப்புகளுடன் தாயின் துணையோடு அந்த ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
“ஜோகூரைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தினர் விடுமுறைக்காகப் போர்ட் டிக்சனுக்கு வந்து, அந்த ஹோட்டல் ரிசார்ட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தங்கியிருந்தனர்.
"சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததை அவனது அண்ணன் கவனித்துள்ளார். பின்னர் பொதுமக்களால் மீட்கப்பட்ட அச்சிறுவனை, அவனது தாய் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்," என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எனினும், அதே நாள் இரவு 10.31 மணிக்கு அச்சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனை முடிவில் அவன் நீரில் மூழ்கியதே இறப்புக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் இந்த வழக்குத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
போர்ட் டிக்சன் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது சிறுவன் உயிரிழப்பு
6 ஜூன் 2026, 2:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
இறால் பிடிக்க வலை வீசிய போது முதலையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் படுகாயம்
Pakiya
25 மே 2026

national
போர்ட்டிக்சன் கடலில் ஆயுதங்களுடன் நுழைந்த 15 இந்தோனேசியர்கள் கைது
Shalini Rajamogun
6 மே 2026

national
PLKN 3.0: போர்ட்டிக்சனில் புதிய பயிற்சி முகாம் திறப்பு; கூடுதல் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

national
சிரம்பான்–போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் விபத்து: ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு
Shalini Rajamogun
23 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




