சிரம்பான்–போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் விபத்து: ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு

23 பிப்ரவரி 2026, 7:22 AM
சிரம்பான்–போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் விபத்து: ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு

போர்ட்டிக்சன், பிப். 23 — நேற்று மாலை சிரம்பான நோக்கி செல்லும் சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் KM16.6 பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

மாலை சுமார் 6.54 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் PLUS அவசர உதவி லாரி, PLUS ரோந்து 4WD வாகனம் மற்றும் ஹோண்டா CR V கார் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்தன என போர்ட்டிக்சன் மாவட்டக் காவல்துறை தலைவர் மஸ்லான் உதின் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஹோண்டா CR-V வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக UCSI மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது இரவு சுமார் 8.10 மணியளவில் அச்சிறுமி உயிரிழந்தார்.

இதற்கிடையில், இந்த விபத்தில் சிறுமியின் பெற்றோரும் காயமடைந்து, போர்ட்டிக்சன் மற்றும் UCSI மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மஸ்லான் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.