25 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் அடையாளம்  கண்டு,17 நகரும் சிசிடிவிக்கள் மூலம் எம்பிபிஜே (MBPJ) கண்காணிப்பு

26 மே 2026, 8:54 AM
25 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் அடையாளம்  கண்டு,17 நகரும் சிசிடிவிக்கள் மூலம் எம்பிபிஜே (MBPJ) கண்காணிப்பு
25 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் அடையாளம்  கண்டு,17 நகரும் சிசிடிவிக்கள் மூலம் எம்பிபிஜே (MBPJ) கண்காணிப்பு

ஷா ஆலாம், மே 26: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) நிர்வாகப் பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப் படும் 25 முக்கிய இடங்களை (hotspots) அதிகாரிகள் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளனர்.

பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி பொருத்தப் பட்டுள்ள 17 நகரும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்பின் மூலம், மேலும் 19 சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமது சாஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.

"இந்த ஆண்டு மே மாதம் வரை, இரண்டு குற்றச்சாட்டுகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, 182 அபராதங்கள் (compounds) விதிக்கப்பட்டுள்ளன, மற்றும் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று அவர் நேற்று எம்பிபிஜே (MBPJ) மாமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய போது கூறினார்.

பெட்டாலிங் ஜெயா பகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிரமாகச் செயல்படுத்தப் பட்டு வரும் 'PJ Watch' திட்டத்தின் விளைவாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கல்வி, கண்காணிப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அமலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்படுத்தப் பட்டதில் நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளதாக முகமது சாஹ்ரி தெரிவித்தார்.

"பெட்டாலிங் ஜெயாவை 2030-ஆம் ஆண்டிற்குள் நிலையான மற்றும் மகிழ்ச்சியான நகரமாக (Mampan dan Bahagia 2030) மாற்றுவதற்கு, தகவல் பகிர்வு, கண்காட்சி கூடங்கள் மற்றும் PJ Watch @Taman, PJ Watch @School போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

சட்டவிரோத குப்பை கொட்டும் பிரச்சினையைச் சமாளிக்க, நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு ஏற்ப ரோந்துப் பணிகளையும், அமலாக்க நடவடிக்கைகளையும் தொடர்ந்து அதிகரிக்க உள்ளதாக அவர் உறுதியளித்தார்.

"பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காக, நகரத்தின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பேணிக் காப்பதில் பெட்டாலிங் ஜெயா மக்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என எம்பிபிஜே (MBPJ) கேட்டுக் கொள்கிறது," என்று அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.