ஷா ஆலம், மே 24- அண்மையில் எஸ்பயர் கின்ராராவில் (Espire Kinrara) சிலாங்கூர் சிறப்புத் திறன் கொண்டோர் அறக்கட்டளை (Yayasan Insan Istimewa Selangor - YANIS) ஏற்பாடு செய்திருந்த ‘மாணிஸ்’ (MANIS) தொகுதி 2-க்கான பயிற்சியாளர் பயிற்சிப் பட்டறையில் (TOT) சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மொத்தம் 64 கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் (JPNS) பாலர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டத்தின் (PPKI) தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பள்ளிகளில் பயிலும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் தேவைகளை மிகவும் திறம்பட மற்றும் விரிவான அணுகுமுறையின் மூலம் கல்வியாளர்கள் புரிந்துகொள்வதற்கு உதவும் நோக்கில், யானிஸின் உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் (Inclusive Development Program) வழியாக இந்தப் பயிலரங்கு முன்னெடுக்கப்பட்டதாக அந்த அறக்கட்டளை தெரிவித்தது.
உள்ளடக்கிய கல்வியை வலுப்படுத்துவதற்காகவும், சிறப்புத் தேவையுடைய குழந்தைகளை அணுகி அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த முறையில் ஆதரவளிப்பதில் கல்வியாளர்களின் புரிதலை மேம்படுத்தும் முயற்சியாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது," என்று அதன் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிலரங்கின் மூலம் பகிரப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் தகவல்கள் மாநிலத்திலுள்ள மேலும் பல கல்வியாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
"சிலாங்கூரில் மேலும் சிறப்பான, தரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கிய கல்விச் சூழலை உருவாக்குவதற்கு ஏதுவாக, இந்தப் பட்டறையின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களும் அறிவும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு, மேலும் பல கல்வியாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என நம்புகிறோம்," என்று அது மேலும் கூறியது.
அதே அறிக்கையில், இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஆதரவளித்த அனைத்துத் தரப்பினருக்கும் யானிஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
சிலாங்கூர் மாநிலத்தின் 64 கல்வியாளர்கள் கல்விப் பயிலரங்கில் பங்கேற்பு- யானிஸ்
24 மே 2026, 5:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ரஹ்மா இன்சான் இஸ்திமேவா உதவிக்கான (BRAIS) விண்ணப்பங்கள் ஜூன் 22 வரை திறக்கப்பட்டுள்ளன
Pakiya
2 ஜூன் 2026

selangor
செரிப்ரல் பால்சி (Cerebral Palsy) பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் பராமரிப்பாளர்களின் முன்னேற்றம் அவசியம்: யானிஸ்
Shalini Rajamogun, Ufairah Tarmidzi
22 ஏப்ரல் 2026

selangor
நிதி திரட்டும் திட்டம் மற்றும் விருந்து நிகழ்வுகளை நிர்வகிப்பதற்கான முன்மொழிவுகளை யானிஸ் வரவேற்கிறது
Shalini Rajamogun
19 ஜனவரி 2026

national
சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் கொள்கை அடுத்த மாதம் மாநில ஆட்சிக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்
Mavitthran
26 டிசம்பர் 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



