ஷா ஆலம், ஜன 19: 2026ஆம் ஆண்டிற்கான நிதி திரட்டும் திட்டம் மற்றும் கலா விருந்து (Gala Dinner) நிகழ்வுகளை நிர்வகிப்பதற்காக ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்க யாயாசான் இன்சான் இஸ்திமேவா சிலாங்கூர் (யானிஸ்) அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்வமுள்ள தரப்புகள் மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வர வேண்டும். மேலும், இலாப நோக்கமற்ற நிதி திரட்டல் மேலாண்மையில் அனுபவம் கொண்டிருப்பதோடு வலுவான நிதி வசதிகளை கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், மலேசியாவில் மாற்றுத்திறனாளிகளின் (OKU) சூழல் குறித்த புரிதலை கொண்டிருக்க வேண்டும் என யானிஸ் தெரிவித்துள்ளது.
“முன்மொழிவுகளில் நிறுவன விவரங்கள், பிரதான நபரின் தகவல்கள், நிதி ஆவணங்கள் மற்றும் 2026 பிப்ரவரி முதல் ஜூலை வரை நடைபெறும் திட்ட நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்,” என யானிஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இந்த திட்டம் மூலமாக மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி சார்ந்த செயல்திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தவும் யானிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அனைத்து முன்மொழிவுகள் மற்றும் முழுமையான ஆவணங்கள் corporate@yanis.org.my என்ற மின்னஞ்சலுக்கு ஜனவரி 21, இரவு 11.59 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தரப்புகளுக்கு மட்டும் தொடர்பு கொள்ளப்படும்.


